rajamouli talking about next movi
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் மிகவும் பிரமாண்டமாக வெளிவந்த திரைப்படம் பாகுபலி 2 . இந்த படம் தற்போது வரை இந்தியாவில் மட்டும் ஆயிரத்து எழுநூறு கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ளது.
இந்த படத்திற்கு எப்படி பிரமாண்ட வரவேற்பு கிடைத்ததோ அதே போல், இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர் நடிகைகளையும் அடுத்த கட்டத்திற்க்கு கொண்டு சென்றுள்ளது இந்த திரைப்படம்.
இதனால் பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்கள் கூட இவருடைய இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதாகவும், ஒரு சிலர் தங்களுடைய மேனேஜர்கள் வைத்து அவருடைய படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு வருவதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.
இந்நிலையில் இதுவரை தன்னுடைய, அடுத்த திரைப்படம் குறித்து வாய் திறக்காமல் இருந்து வந்த, இயக்குனர் ராஜமௌலி முதல் முறையாக தன்னுடைய அடுத்த திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, தன்னுடைய அடுத்த திரைப்படம் கண்டிப்பாக, பாகுபலி அளவிற்கு மிகவும் பிரமாண்டமாக இருக்காது என்றும். ஆனால் உணர்வுகளை கொண்ட திரைப்படமாக இருக்கும் என கூறியுள்ளார்.
மேலும் தற்போது இது போன்ற ஒரு கதையை தன்னுடைய தந்தை விஜயேந்திர பிரசாத் எழுதி வருவதாகவும். அவர் எழுதி முடித்த பிறகே, நான் அதற்கேற்ற நடிகர் நடிகைகளை தேர்வு செய்வேன் என ராஜமௌலி கூறியுள்ளார்.
