rajamouli suspence reveel

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் விரைவில் வெளியாக தயாராக உள்ள படம் 'பாகுபலி 2 ' இந்த படத்தின் ப்ரோமோசன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் தற்போது தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படம் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ராஜமௌலி, தொகுப்பாளர் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் கொடுத்தார். 

அப்போது பலரது கேள்வியாக இருக்கும், பாகுபலியை ஏன்..? கட்டப்பா கொன்றார் என்கிற கேள்வியை நாசுக்காக, பாகுபலியை கட்டப்பா கொன்றாரா அல்லது குத்தினாரா என கேள்வி எழுப்ப, அதற்கு சாமர்த்தியமாக விரைவில் படம் வெளியாகும் அப்போது விரைவில் படம் வெளியாக போகிறது பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் என பதிலளித்தார். இதனை சற்று எதிர்பார்க்காத தொகுப்பாளருக்கு செம்ம பல்ப் கிடைத்தது.