விஜய் டிவி தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட சீரியல் 'ராஜா ராணி' . இந்த சீரியலில் ஆலியா மானசா கதாநாயகியாகவும், சஞ்சீவ் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்கள். இயக்குனர் பிரவீன் இந்த சீரியலை இயக்கி வருகிறார்.

பணக்கார வீட்டை சேர்ந்த ஒருவர் சற்றும் இஷ்டம் இல்லாமல் வீட்டில் வேலை செய்யும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட பின் அவர்கள் வாழ்க்கையில் என்னென்ன மாற்றம் வருகிறது. வேலைக்காரியான செம்பாவை மனைவியாக ஏற்று கொள்வது எப்படி என்பதை குறித்து மிகவும் சுவாரஸ்யமாக இந்த செயலில் கூறியிருக்கிறார் இயக்குனர்.

மேலும் இந்த சீரியல் மூலம் ரீல் ஜோடியாக இருந்த ஆலியா மற்றும் சஞ்சீவ் இருவரும் ரியல் ஜோடியாகவும் மாறிவிட்டனர். 

இவர்களுடைய திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் அவார்டு நிகழ்ச்சியில் நடைபெற்றதை தொடர்ந்து திருமணமும் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இந்த தொடரை விரைவில் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், 'ராஜா ராணி' சீரியலுக்கு இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. அனால் இது குறித்த எந்த ஒரு அதிகார அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.