'ராஜா ராணி' சீரியல் புகழ், ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் சீரியல் ஜோடி என்பதையும் தாண்டி. தற்போது திருமண வாழ்விலும் இணைய உள்ளனர். சமீபத்தில் நடந்த விஜய் அவார்ட் நிகழ்ச்சியில், ஆலியாவிற்கும், சஞ்சீவிற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்நிலையில், இவர்கள் நடித்து வரும் 'ராஜா ராணி' சீரியல் சில காலம் சிங்கப்பூரில் படமாக்கப்பட்டது. இதற்காக படக்குழுவினர் அனைவரும், சிங்கப்பூர் சென்று, படப்பிடிப்பை முடித்து கொண்டு சென்னை திரும்பியுள்ளனர்.

இதுகுறித்து,  பேட்டி கொடுத்துள்ள சஞ்சீவ் முதல் முறையாக தனக்கும் இருக்கும் பிரச்சனையால் அவமானப்பட்டதாக கூறியுள்ளார். இவருக்கு சிறு வயதில் இருந்தே, அல்டோஃபோபியா என்கிற பிரச்சினை இருந்து வருகிறதாம்.  இந்த பிரச்சனை உள்ளவர்கள் உயரமான இடங்களுக்கு செல்ல பயப்புடுவார்கள். யாரேனும் வற்புறுத்தி அழைத்தாலும் இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு ஒரு வித பய உணர்வு வரும்.

ராஜா ராணி சீரியல் சிங்கப்பூரில் நடைபெற்ற போது, உயரமான இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. ஆனால், சஞ்சீவ் உயரமான இடங்களில் நடிக்க மாட்டேன் என கூறி கூறியுள்ளார். இதற்கு இயக்குனர் உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்து கொண்டு அல்லவா நீங்கள் நடிக்க வந்திருக்க வேண்டும் என திட்டியுள்ளார். எனவே மிகவும் மன வேதனையுடன், முதல் முறையாக இப்பிரச்னையால் தான் இந்த அளவிற்கு அவமானப்பட்டதாக கூறியுள்ளார்.

இதனால், எப்படியும் தன்னுடைய காதலருக்கு இருக்கும் பிரச்னையை சரி செய்தே ஆக வேண்டும் என அதிரடி முடிவு எடுத்துள்ளாராம்.