பல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த, இல்லத்தரசிகளின் மனதை கவர்ந்த சீரியலில் நடித்து பிரபலமானவர் ஷப்னம். இவர் நடித்த 'தெய்வமகள்',  'ராஜா ராணி' சீரியல் முடிவடைந்து விட்டாலும், பலரது நினைவை விட்டு நீங்காத சீரியல்களாக உள்ளது.

இந்நிலையில் இவர், அவருடைய உறவினர் ஆர்யன் என்பவரை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் கடந்த வருடம் திருமண நிச்சயதார்த்தம், மிக பிரமாண்டமாக நடந்தது. இதில் பல சீரியல்  பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

மேலும் திருமணம் , பிப்ரவரி மாதம், நடைபெறும் என இவர்களுடைய தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. ஆனால், சொன்னது போல் திருமணம் நடைபெறவில்லை. எனவே இவர்களுடைய திருமணம் நின்றுவிட்டதாக பல தகவல்கள் உலா வந்தபோதும், ஷப்னம் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் கூறவில்லை.

இந்நிலையில் நீர் போனதாக கூறப்பட்ட ஷப்னம் - ஆர்யன் திருமணம் , செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி, அவர்களுடைய சொந்த ஊரில்  நடைபெற உள்ளதாகவும், திருமணத்தை தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சி, செப்டம்பர் 8 தேதி நடைபெறும் என  தகவல் வெளியாகியுள்ளது . இதைத்தொடர்ந்து இவர்களுக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.