பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் ஜூலியின் அட்டகாசம் அதிகரித்துக்கொண்டு தான் இருக்கிறது. சின்ன பிக் பாஸ் ஆக்கப்பட்ட போட்டியாளர்கள் காயத்ரி மற்றும் ஆரவால் வெளியேற்றப்பட்ட ஜூலி இவர்கள் மீது செம கடுப்பில் இருக்கிறார்.

இதனால் அடிக்கடி இவர் தான் ஒரு செவிலியர் என்பதை மறந்து தொகுப்பாளராக மாறி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க துவங்கி விடுகிறார். அப்படி ரைசாவை பிடித்து வைத்துக்கொண்டு நீங்கள் சின்ன பாஸ் ஆக மாறினால் என்ன செய்திருப்பீர்கள் என கூறி ஒரு சில கேள்விகளை அவரிடம் கேட்டார்.

முதலாவதாக நீங்கள் நேற்றைய தினம் சின்ன பிக் பஸ்ஸாக இருந்திருந்தால் உங்களுடைய வேலையாளாக யாரை தேர்தெடுத்திருப்பீர்கள் என கேட்டார் அதற்கு ரைசா ஜூலி என கூறினார் காரணம் அனைத்து வேலைகளையும் மிகவும் பொறுப்பாக ஜூலி செய்வர் என தெரிவித்தார்.

அடுத்ததாக யார் இங்கு மிகவும் சோம்பேறி என ஜூலி கேள்வி எழுப்பியதும் அதற்கு ரைசா ஓவியா என்று கூறினார். இந்த வீட்டை விட்டு நீங்கள் வெளியே அனுப்பும் ஆள் யார் என கேட்க அதற்கு கணேஷ் என்று பதில் கொடுத்தார். 

மேலும் யாரை நீங்கள் சேவ் பண்ணனும் என்று நினைப்பீர்கள் யாரை எலிமினேட் செய்யவேண்டும் என நினைப்பீர்கள் என கேட்டதற்கு. ஒரு வேலை நான் சக்தியை சேவ் செய்ய நினைத்திருப்பேன்  என்றும், வையாபுரி வீட்டுக்கு போக ஆசைப்படுவதால் அவரை எலிமினேட் செய்ய சொல்வேன் என்று கூறியதும். ஒரு கேள்வியை மிகவும் பர்சனலாக உங்களிடம் கேட்கிறேன் என கூறிய ஜூலி... இந்த வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்களை நிற்கவைத்து மிகவும் வலிமையாக கன்னத்தில் அறையச்சொன்னால் யாரை அடிப்பீர்கள் என கேட்டதற்கு ரைசா ஜூலி எதிர்பார்த்ததுபோல ஓவியாவின் பெயரை கூறினார்.