raiza appear next nomination
மும்பையில் மாடலிங் துறையில் மிகவும் பிரபலமான ரைசா தற்போது வேலை இல்லா பட்டதாரி படத்தின் இரண்டாவது பாகத்தில் கஜோலுக்கு பர்சனல் அசிஸ்டண்டாக நடித்துள்ளார்.
தற்போது இவர் பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டு மேக் அப்பில் தூள் கிளப்பி வருகிறார்.
இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய விதியான "எலிமினேஷன் குறித்து யாரிடமும் கலந்துரையாட கூடாது" என்னும் விதியை மீறி நமிதா மற்றும் ஓவியாவுடன் உரையாடியதால். யாருடைய பரிந்துரையும் இல்லாமல் நேரடியாக நாமினேஷன் லிஸ்டில் இணைந்துள்ளார்.
பலரும் ஓவியாவுக்கு மட்டுமே சப்போர்ட் செய்து வருவதால்... ரைசா போன்றவர்கள் எலிமினேஷனில் இருந்து காப்பாற்றப்படுவார்களா என சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
