நடிகை ஓவியா வெளியேற்றப்பட்ட பின் பிக் பாஸ் நிகழ்ச்சி சிறிது பின்தங்கியுள்ளது என்று தான் கூறவேண்டும். 

ஓவியாவிற்காக பார்த்த பலர் இந்த நிகழ்ச்சியை புறக்கணித்து வந்தாலும். ஸ்வாரஸ்யம் குறையாத அளவில் இந்த நிகழ்ச்சியில் பல ரகளைகள் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது.

போட்டியாளர்கள் அனைவருக்கும் தற்போது கொடுக்கப்பட்டுள்ள டாஸ்கில், அதிகப்படியான சட்டைகளை எடுத்து அதில் படிந்துள்ள கரைகளை  துவைக்க வேண்டும் என்பது தான் விதி. இந்த டாஸ்க் தொடர்ந்து மூன்று நாட்கள் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு டீம்களாக பிரிந்து இந்த டாஸ்க்கை மேற்கொண்டுள்ளனர் போட்டியாளர்கள். தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் ஆரவ் துணிகள் வரும் பலவையின் மேல் ஏறி தன்னுடைய அணிக்காக துணிகளை சேகரிக்கிறார்.

இதற்கு காயத்ரி தம்பி  கீழே இறங்கு அக்கா சொல்லுறேன் என ஆரவிற்கு கட்டளை போட்டார். இதனை கேட்டு கிழே இறங்கி விட்டார் ஆரவ். உடனே ஆரவை கூப்பிட்டு உங்க அக்கா.. தம்பி.. பாசத்தை வெளியில் வைத்துக்கொள்ளுங்கள் இங்க வேண்டாம் என கோபமாக ஆரவிற்கு ஆர்டர் போட்டார் ரைசா...