பிக் பாஸ்  2 நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பை பெறா விட்டாலும். பிக்பாஸ் முதல் சீசனுக்கு நல்ல வரவவேற்பு இருந்தது. முதல் சீசனில் கலந்து கொண்டு விளையாடிய பலர் தற்போது திரைப்படங்கள் நடிப்பதில் செம்ம பிஸி.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பை பெறா விட்டாலும். பிக்பாஸ் முதல் சீசனுக்கு நல்ல வரவவேற்பு இருந்தது. முதல் சீசனில் கலந்து கொண்டு விளையாடிய பலர் தற்போது திரைப்படங்கள் நடிப்பதில் செம்ம பிஸி. ஆனால் இரண்டாவது சீசனிலோ அப்படியே வேறு... டைட்டில் வின்னருக்கு கூட பட வாய்ப்புகள் கிடைக்க வில்லை என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு பிறகு கொஞ்சம் நல்ல பெயரை பெற்று பிரபலமடைந்தவர் ரைசா.

மாடலிங் துறையில் இருந்த இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர்.

தனுஷ் நடிப்பில் வெளியான வி ஐ பி- 2 படத்தில் கஜோலுக்கு உதவியாளராக சிறு வேடத்தில் நடித்திருந்த இவர்.. பின்பு 'பியார் பிரேமா காதல்' படத்தின் மூலம் கதாநாயகியாகவும் மாறினார்.

இந்நிலையில் நடிகை ரைசா, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தேளை சாப்பிட்டுக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

View post on Instagram

இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் பலர் ... ச்சீ இதை கூட சாப்பிடுவீர்களா? என முகம் சுழித்தவாறு கேள்வி எழுப்பியுள்ளனர்.