raid in Rajini Kamal house - mayilsamy
விஜய்-ஐ ஆதரித்தார் என்ற காரணத்தில் விஷால் அலுவலகத்தில் ரெய்டு போனீர்கள், அப்படியே ரஜினி, கமல் வீட்டுக்கும் ரெய்டு போங்க என்று மயில்சாமி ஆவேசமாக தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் மயில்சாமி ஆவேசத்துடன் பல்வேறு வினாக்களையும், தனது கருத்தையும் முன்வைத்தார்.
அதில், “இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான தமிழகத்தைத் தொடர்ந்து மத்திய அரசு வஞ்சிக்கின்றது.
வாஜ்பாய்காக நான் பாஜக-வை அதிகமாக நேசித்தேன். ஆனால், தற்போது வேதனைப்படுகிறேன்.
பிரதமர் மோடி உலகம் சுற்றியதற்கு பதிலாக, இந்தியாவை சுற்றி வந்திருக்கலாம். சாலைகளாவது தரமானதாக இருந்திருக்கும்.
பிரதமர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஆனால் இந்தியாவில் வறுமையில் இருப்பவர்கள் இன்னமும் வறுமையில்தான் இருக்கின்றனர்.
ஜிஎஸ்டி ஆதரிக்கிறீகளா? இல்லையா? என மக்களிடம் கேட்க வேண்டும்.
செந்தில் பாலாஜி வீட்டுக்கு ரெய்டுக்கு போனார்களே என்ன ஆனது?
ராமமோகன் ராவ், சேகர் ரெட்டி, விஜய பாஸ்கர் வீடுகளுக்கு ரெய்டு போனீர்களே என்ன ஆனது?
மெர்சலின் ஜிஎஸ்டி விவகாரத்தில் விஜய்க்கு, விஷால் ஆதரவு தெரிவித்தார் என்பதற்காகத்தான் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.
அப்படியே ரஜினி, கமல் கூட விஜய்க்கு ஆதரவு தெரிவித்தார்கள் அவர்கள் வீட்டுக்கும் ரெய்டு போங்க! என்று மயில்சாமி ஆவேசமாக தெரிவித்தார்.
