அஜய் தேவ்கன் நடிக்கும் 'ரெய்டு 2' படத்தின் ட்ரைலர் தற்போது, படத்தின் ரிலீஸ் தேதியோடு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அஜய் தேவ்கன் நடிக்கும் 'ரெய்டு 2' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது. அரசியல் வாதிகளை குறிவைத்து, தேடுதல் வேட்டை நடத்தும் ஐஆர்எஸ் அதிகாரி அமய் பட்நாயக்காக அஜய் தேவ்கன் மீண்டும் வருகிறார். முதல் பாகத்தில் வில்லனாக நடித்த சவுரப் சுக்லா இந்த படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்க, ஸ்டைலிஷ் ஹீரோவாக பார்க்கப்பட்ட ரித்தேஷ் தேஷ்முக் கூலான இளம் வில்லனாக நடித்து மிரளவைத்துள்ளார்.
தாதா பாய் என்கிற கதாபாத்திரத்தில் ரித்தீஷ் தேஷ்முக் நடித்துளளார். அஜய் தேவ்கன் தன்னுடைய 75-ஆவது ரெய்டில் சந்திக்கும் சவால்களும், பிரச்சனைகளும் தான் இந்த படத்தின் கதைக்களம் என கூறப்படுகிறது. 2018 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த 'ரெய்டு' படத்தின் தொடர்ச்சியாக ரெய்டு 2 எடுக்கப்பட்டுள்ளது. 1980 களில் நடந்த ஒரு உண்மையான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தான் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்படத்தில், வாணி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். படத்தின் ட்ரைலர் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ள நிலையில், மே 1 ஆம் தேதி 'ரெய்டு 2' ரிலீஸ் ஆகும் என அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ('Raid 2' trailer released - Important update) பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் டீசீரிஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது . முதல் பாகத்தை இயக்கிய ராஜ் குமார் குப்தா இப்படத்தையும் இயக்குகிறார். அமித் திரிவேதி இசையமைக்கிறார். ரித்தேஷ் ஷா, ராஜ் குமார் குப்தா, ஜெய்தீப் யாதவ், கரண் வியாஸ் ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர்.
இந்த படத்தின் ட்ரைலர் இதோ:

