தமிழில் 'தடையற தாக்க', 'என்னமோ ஏதோ', 'தீரன் அதிகாரம் ஒன்று' ஆகிய படங்களில் நடித்தவர் ரகுல் பிரீத்சிங். இப்போது சூர்யாவுடன் என்.ஜி.கே படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். 'மீடூ' இயக்கம் குறித்து ஒரு பேட்டி அளித்துள்ளார்...

நாடு முழுவதும் 'மீடூ' இயக்கம் பற்றி பரவலாக பேசி வருகிறார்கள். நான் லூவ் ராஜன் தயாரிக்கும் தி தி பியர் தி என்ற இந்தி படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடித்து வருகிறேன். லூவ் ராஜன் மீதும் பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் நல்லவர்.

எது தவறு, எது சரி என்று சொல்ல விருப்பவில்லை. ஒரு பெண்ணை கற்பழிப்பதற்கும் பாலியல் ரீதியாக பண்படுத்த வற்புறுத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது. எது உண்மை எது பொய் என ஆராய வேண்டும். பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் அதிகமாக வெளியே தெரிவது இல்லை. பாலியல் தொந்தரவுகளை அம்பலப்படுத்த தைரியம் வேண்டும்.

இப்போது நிறைய பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள், பற்றி பேசி வருகிறார்கள். அவர்களுக்கு எந்தது ஆதரவு உண்டு. மீடூ இயக்கம் மக்கள் மத்தியில் கவனம் பெற்று இருப்பது மகிழ்ச்சி'. ஆண்டாள் மீடூ வை யாரும் தவறாக பயன்படுத்தக்கூடாது என தெரிவித்துள்ளார்.  

இவர் மீடூவுக்கு ஆதரவாக பேசி இருந்தாலும், பாலியல் சர்ச்சையில் சிக்கிய இயக்குனருக்கு இவர் சப்போர்ட் செய்து பேசியுள்ளதால் ரகுல் பிரீத் சிங்கை கேள்வி மேல் கேள்வி கேட்டு வெளுத்து வாங்கி வருகிறார்கள்.