நடன இயக்குனர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என திரையுலகத்தில் பன்முக திறமையோடு விளங்கி வரும், இயக்குனர் ராகவா லாரன்ஸ், தற்போது 3 கோடி நிதி உதவியை அறிவித்துள்ளார்.

ஓரிரு தினத்திற்கு முன்பு தான் தல அஜித் 1 . 25 கோடி நிதி உதவியை அறிவித்த நிலையில், தற்போது ராகவா லாரன்ஸ் தன்னுடைய சார்பில் உதவிகளை அறிவித்துள்ளார்.

அதன் படி இவர் பிரதமரின் நிதிக்கு 50 லட்சம், தமிழ்நாடு முதலமைச்சரின் நிதிக்கு 50 லட்சம், பெப்சி தொழிலாளர்களுக்கு 50 லட்சம், டான்ஸ் யூனியனுக்கு 50 லட்சம், மாற்று திறனாளிகளுக்கு 50 லட்சம், மற்றும் தின கூலி ஊழியர்களுக்கு 75 லட்சம் என மொத்தம் 3 கோடி நிதி உதவியை அறிவித்துள்ளார்.