இயக்குனர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியாகி, தற்போது மூன்று பாகங்களை கடந்துள்ளது 'காஞ்சனா'. திரைப்படம். இந்த படத்தின் அனைத்து பாகத்திற்கும் குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

சமீபத்தில் வெளியான காஞ்சனா 3 படம், இதற்கு முன் வெளியான பாகங்களை போன்றே உள்ளது என்றும், குழந்தைகள் மற்றும் பெண்களால் விரும்பி பார்க்கும் ராகவா லாரன்ஸின் படத்தில்,  இந்த அளவிற்கு கவர்ச்சி தேவையற்றது என்பதே பலரது கருத்தாக இருந்தது.

இந்நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான, காஞ்சனா படத்தை இந்தியில் 'லட்சுமி பாம்' என்கிற ரீமேக் செய்கிறார் லாரன்ஸ். இந்த படத்தில் அக்ஷய் குமார் கதாநாயகனாக நடிக்கிறார். நடிகர் மாதவனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஒன்று வெளியாகியுள்ளது.

இதில் படத்தின் பெயரோடு அக்ஷய் குமார், கண்ணிற்கு மை வைக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.  மேலும் 2020 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி இப்படம் ரிலீஸ் செய்யப்படும் என்பதையும் படக்குழு அறிவித்துள்ளனர். இந்த போஸ்டருக்கு பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.