Raghava Lawrence : நண்பன் விஜய் கட்டிய சாய் பாபா கோவிலுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த ராகவா லாரன்ஸ் - வீடியோ இதோ
சென்னை கொரட்டூரில் நடிகர் விஜய் புதிதாக கட்டி இருக்கும் சாய் பாபா கோவிலுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். அவர் நடிப்பில் தற்போது கோட் திரைப்படம் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5-ந் தேதி திரைக்கு வர உள்ளது. கோட் படத்தின் ரிலீசுக்கு பின்னர் நடிகர் விஜய் தளபதி 69 படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை எச்.வினோத் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. அப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தளபதி 69 படத்தோடு நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்து உள்ளார். அப்படத்தில் நடித்து முடித்த கையோடு முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார் விஜய். மறுபுறம் விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக் கழகம் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆயத்தம் ஆகி வருகிறது. இப்படி சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் பிசியாக இருக்கும் விஜய், சைலண்டாக ஒரு கோவிலையும் கட்டி முடித்திருக்கிறார்.
இதையும் படியுங்கள்... சினிமாவில் டாப் ஹீரோயினாக இருக்கும் இவங்கெல்லாம் டாக்டருக்கு படிச்சவங்களா..! இவ்ளோ நாளா இதுதெரியாம போச்சே
சென்னை கொரட்டூரில் புதிதாக சாய் பாபா கோவில் ஒன்று கட்டப்பட்டு உள்ளது. அந்த கோவிலை நடிகர் விஜய் தான் தன்னுடைய சொந்த செலவில் கட்டி இருக்கிறார். நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர், நீண்ட நாட்களாக தன் மகனிடம் கோவில் கட்டுவது பற்றி கேட்டு வந்தாராம். தாயின் ஆசையை நிறைவேற்றும் விதமாக விஜய் அதனை சைலண்டாக கட்டி முடித்து கும்பாபிஷேகமும் நடத்தி முடித்திருக்கிறார். அந்த கோவில் தற்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் விஜய் கட்டியுள்ள சாய் பாபா கோவிலுக்கு இன்று சர்ப்ரைஸாக சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகரும் உடன் இருந்தார். கோவிலுக்கு சென்றபோது எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார் லாரன்ஸ். இவரும் சொந்தமாக ராகவேந்திரர் கோவிலை கட்டி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Vijay TV Pugazh : பாலாவை போல நீங்களும் உதவி செய்வீங்களா? குக் வித் கோமாளி புகழ் சொன்ன ‘நச்’ பதில்