சென்னை நேரு ஸ்டேடியத்தில் கடந்த 7ம் தேதி நடிகர் ரஜினிகாந்தின் தர்பார் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் ரஜினிகாந்த் தனது அரசியல் வருகை குறித்து ஏதாவது பேசுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அவரது தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ் தேவையில்லாமல் பேசி சர்ச்சையில் சிக்கிக் கொண்டார். அரசியல் ரீதியாக சீமானை பேசி வம்பிழுத்த லாரன்ஸ், கமல் ஹாசன் குறித்து பேசியது திரைத்துறையினரை கடுப்பேற்றியது. 

"சின்ன வயதில் ரஜினி பட போஸ்டர் ஒட்ட செல்வேன். அப்போது அருகில் கமல் பட போஸ்டர் இருந்தால் சாணி அடித்துவிடுவேன், ஆனால் இப்போது இருவரும் ஒன்றாக இருப்பதை பார்க்கும் போது ஏதோ நடக்கப்போகிறது என்பது மட்டும் தெரிகிறது" என்று பேசினார். ரராகவா லாரன்ஸ் இப்படி பேசியதை ரஜினியும் பெரிதாக கண்டு கொண்டதாக தெரியாத நிலையில், சோசியல் மீடியாவில் ராகவா லாரன்ஸை கமல் ரசிகர்கள்  வறுத்தெடுத்தனர். 

தமிழ் சினிமாவை சர்வதேச தரத்திற்கு உயர்த்திய உலக நாயகன் என் தலைவன்? அவர் போஸ்டர் மீது சாணி அடிப்பியா?  என லாரன்ஸை வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்தனர் கமலின் ரசிகர்களும், தொண்டர்களும். சோசியல் மீடியாவில் தீயாய பரவி வரும் அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, சத்தமே இல்லாமல் கமல் ஹாசனை நேரில் சென்று சந்தித்துள்ளார் ராகவா லாரன்ஸ். மேலும் கமல் ஹாசன் குறித்து நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும், அதனால் நான் கமல் ஹாசனை நேரில் சந்தித்து விளக்கம் அளித்ததாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

 

ஒரு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வச்சிட்டிங்க ஓ.கே., சீமான் அண்ணன் விவகாரம் என்னாச்சு என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ரஜினி முன்னாடி சீமானை மறைமுகமாக கிழி, கிழியென கிழித்த ராகவா லாரன்ஸை, நாம் தமிழர் தம்பிகள் வறுத்தெடுத்து வருகின்றனர். இந்நிலையில் கமலிடம் சரண்டர் ஆனது போல சீமானிடமும் ராகவா லாரன்ஸ் சமாதானம் ஆவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.