தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருவதால், தற்போது தமிழ் சினிமாவில், அதிக சம்பளம் வாங்கும் ஷங்கர் மற்றும் முருகதாஸை விட இரண்டு மடங்கு, பிரபல இயக்குனர் ஒருவரின் சம்பளம் உயர்ந்துள்ளதாகவும், இவர் சமீபத்தில் இயக்கியுள்ள படத்திற்கு ரூபாய் 50 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ராகவா லாரன்ஸ்:

நடன இயக்குனராக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்து, நடிகர், இயக்குனர் என தனக்குள் இருக்கும் திறமையை வெளிக்காட்டி வருபவர் ராகவா லாரன்ஸ்.


இவர் இயக்கி, நடித்த, காஞ்சனா சீரிஸ் திரைப்படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக ராகவா லாரன்சுக்கு குழந்தைகள் மத்தியில் நிறைய வரவேற்ப்பு கிடைத்தது.

வசூலிலும் 100  கோடியை தாண்டி சாதனை படைத்தது. எனவே இவர் இயக்கிய படங்களை மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்ய பலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.


அந்த வங்கியில் காஞ்சனா 2 படத்தை லட்சுமி பாம் என்கிற பெயரில் நடிகர் அக்ஷய் குமாரை வைத்து ரீமேக் செய்துள்ளார் ராகவா லாரன்ஸ். இந்த படத்தில் நடிகை கியார அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்த படத்தை இயக்குவதற்காக ராகவா லாரன்ஸ் ரூ.50 கோடி சம்பளமாக பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில்  இதுவரை, இயக்குனர் சங்கர் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் மட்டுமே 20  கோடியில் இருந்து 30 கோடி வரை சம்பளமாக பெற்று வந்த நிலையில் அவர்களை விட இரண்டு மடங்கு சம்பளம் வாங்கும் இயக்குனராக தற்போது ராகவா லாரன்ஸ் வளர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.