"ரங்கஸ்தலம்" ரீமேக்கில் ராகவா... இயக்குநர் லிங்குசாமி அடிச்சது லக்கி ப்ரைஸ்...!

ராம்சரண், சமந்தா, ஆதி, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான "ரங்கஸ்தலம்" திரைப்படம் தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. சுகுமார் இயக்கிய இந்த படத்திற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ராகவா லாரன்ஸ் வாங்கி இருப்பதாகவும், அதில் தானே ஹீரோவாக நடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழில் கடைசியாக "காஞ்சனா 3" படத்தில் நடித்த ராகவா லாரன்ஸ். "காஞ்சனா" படத்தின் இந்தி ரீமேக்கை இயக்குவதில் பிஸியாக உள்ளார். "லக்‌ஷ்மி பாம்" என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் அக்‌ஷய்குமார், கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஆரம்பத்தில் தயாரிப்பாளர் தரப்பிற்கும், லாரன்ஸிற்கும் இடையே இருந்த பிரச்னைகள் முடிவுக்கு வந்ததை அடுத்து, படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

"காஞ்சனா" படப்பிடிப்பு முடிந்த கையோடு," ரங்கஸ்தலம்" தமிழ் ரீமேக்கில் ராகவா லாரன்ஸ் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை சண்டைகோழி, அஞ்சான் படங்களின் இயக்குநரான லிங்குசாமி இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், படத்தில் இடம் பெற டெக்னிஷீயன்கள் மற்றும் பிற கதாபாத்திரங்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.