ragava lawrence real hero
நடுத்தர குடும்பத்தில் உள்ள பலர், தற்போது தங்களுடைய அத்யாவசிய செலவுகளை கூட செய்து கொள்ள முடியாத அளவிற்கு விலை வாசி எகிறி போய் உள்ளது.
இதனால் இந்த காலகட்டத்தில் ஒரு குழந்தைக்கு தேவையான கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம் ஆகிய செலவுகளுக்கே பெற்றோர்கள் பெரும் பாடு படுகிறன்றனர்.
இந்த நிலையில் ஒரு நடுத்தர குடும்பத்தில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்தால் அந்த குழந்தைகளை வளர்க்க அந்த பெற்றோர்கள் எந்த அளவுக்கு கஷ்டப்படுவார்கள் என்பதை சொல்லவே தேவையில்லை.
இப்படி இருக்க கடந்த மூன்று வருடங்களுக்கு முன் ஸ்ரீனிவாசன் - யத்ரி என்ற தம்பதிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்தன.
லக்ஷன், லக்ஷயா, லக்ஷிகா, லக்ஷா என்ற பெயருள்ள இந்த குழந்தைகளை வளர்க்க அவர்களது பெற்றோர்கள் கஷ்டப்பட்டு வருவதை ஒரு பத்திரிகையாளர் மூலம் கேள்விப்பட்ட நடிகர் ராகவா லாரன்ஸ்.
இந்த நான்கு குழந்தைகளையும் தத்தெடுத்து அவர்களுக்கு தேவையான படிப்பு, எதிர்கால தேவைகள் அனைத்துக்கும் தான் பொறுப்பேற்பதாக கூறியுள்ளார்.
லாரன்ஸ் அவர்களின் இந்த உதவிக்கு ஸ்ரீனிவாசன் - யத்ரி தம்பதிகள் ஆனந்தக்கண்ணீருடன் நன்றி தெரிவித்தனர்.
