ragava lawrence issue

கோலிவுட்டில் பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்துள்ள நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன். 

இவர் சமீபத்தில் நடிகர் லாரன்ஸ் பற்றி ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அதாவது ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நடிகர் லாரன்ஸ் 1கோடி கொடுத்தார் என கூறப்படுவது உண்மை அல்ல என்றும் அவர் அனைவர் காதிலும் பூ சுற்றுகிறார் எனறும் கூறியுள்ளார்.

மேலும் அவரது மனசாட்சியை தொட்டு சொல்ல சொல்லுங்கள் என கூறியதுடன், அந்த நேரத்தில் பணத்தட்டுப்பாடு இருந்ததால் எப்படி 1கோடி கொடுக்க முடியும் அது சாத்தியமும் இல்லை என்றும், அப்படியே கொடுத்திருந்தால் 5 லட்சம் கொடுத்திருக்கலாம் என கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து அவர் கும்பிடும் ராகவேந்திரா சாமியை மனதில் வைத்து உண்மையை சொல்ல சொல்லுங்கள் என சவால் விட்டுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.