ragava lawrence cancel the press meet for fan

நடிகர் ராகவா லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்தது தான். இதனால் இவர் ரஜினிகாந்தின் அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட உள்ளதாக தகவல்கள் சில வெளியாகி வருகின்றன. 

இந்நிலையில் தன்னுடைய ஆதரவு நிலைப்பாடு குறித்து அறிவிக்க, ராகவா லாரன்ஸ் நாளை செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாகக் கூறப்பட்டிருந்தது. ஆனால் திடீர் என இந்த சந்திப்பை வரும் 7 ஆம் தேதிக்கு மாற்றம் செய்துள்ளார் லாரன்ஸ்.

இந்த திடீர் தேதி மாற்றம் குறித்து கூறப்படுவது ... நடிகர் லாரன்சின் தீவிர ரசிகரான கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் திடீர் என இறந்து விட்டதாகவும். அவருடைய மனைவி தற்போது கர்ப்பமாக இருப்பதால் இவருடைய இழப்பு ஈடுகட்ட முடியாத ஒன்று என்றும்... இதனால் லாரன்ஸ் படப் பிடிப்பை ரத்து செய்ததுடன் பத்திரிக்கையாளர் சந்திப்பையும் வேறு தினத்திற்கு மாற்றம் செய்துள்ளார். 

முதல் வேலையாக, கடலூருக்குச் சென்று, ரசிகரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள உள்ளதாகவும் அதன் பின்பே அரசியலில் ரஜினியுடன் இணைந்து செயல்படுவது குறித்து அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.