இயற்கையுடன் மோதி வெல்ல முடியாது என்பதற்கு பல இயற்கை சீரழிவுகள் உதாரணமாக இருந்தாலும், கஜா புயல் தாக்கத்தால் நாகை, புதுக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள மக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதாரம் சொல்லில் அடங்காதவை.

ஆயிர கணக்கான தென்னை மரங்கள், வாழை, விவசாய நிலங்கள் பாழாகி , அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்வி குறியாக மாற்றியுள்ளது. மேலும் பலர் தங்களுடைய வீடு மாற்று உடைமைகளை இழந்து தவிர்த்து வருகிறார்கள்.

சிலர் உணவுக்காக படும் கஷ்டங்களை பார்க்கும் போது நெஞ்சம் பதறுகிறது. இந்நிலையில் நடிகர் லாகவா லாரன்ஸ் புயலால் பாதிக்கப்பட்டு வீடுகள் இழந்தவர்களுக்கு வீடுகள் கட்டித்தருவதாக கூறியிருந்தார். அப்படி அவரின் குழுவினர் ஒரு வயதான பாட்டியும் வீடுகள் இன்றி இருப்பதை கண்டுபிடித்துள்ளார்.

 

அந்த வயதான பாட்டியிடம் அழுவாதீர்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என ராகவா லாரன்ஸ் கேட்க, அதற்கு அந்த பாட்டி தனக்கு எதுவும் வேண்டாம் என கையெடுத்து கும்பிட்டு ஒரு குடிசை மட்டும் போதும் என கூறுகிறார். இதனை ராகவா லாரன்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.  இந்த பதிவு பார்பவர்கள் நெஞ்சை உருக வைப்பதோடு கண் கலங்க வைக்கும் வகையில் உள்ளதாக பலர் கூறி வருகிறார்கள்.