இன்று நடிகர் சரத்குமாரும் அவரது மனைவி ராதிகாவும் காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். இதுகுறித்த புகைப்படத்தை, ராதிகா தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடிகரும், அரசியல்வாதியுமான சரத்குமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உரிய சிகிச்சைக்கு பின் அதில் இருந்து மீண்டு வந்துள்ளார். இதற்க்கு நேர்த்திக்கடன் செலுத்தும் விதத்தில் சரத்குமார் - ராதிகா தம்பதிகள் காட்சி காமாட்சியம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளனர்.

முகத்தில் முகக்கவசம் அணிந்து உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்துள்ளனர். பின்னர் வெளியே வந்த சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள சொந்த கிராமம் சிராவயலில்  குலதெய்வம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு தற்போது செல்ல இயலாத காரணத்தால், காஞ்சி காமாட்சி அம்மனை தரிசிக்க வந்துள்ளோம் என்கிறார்.


          
மேலும் சரத்குமார் மற்றும் ராதிகா ஆகிய இருவரும் மாலையும் கழுத்துமாக இருப்பதும் பூசாரிகள் பூஜை செய்து அவருக்கு பிரசாதம் கொடுப்பதுமாக காட்சிகள் உடைய புகைப்படத்தை வெளியிட்டு நடிகை ராதிகா டுவிட்டரில் காஞ்சி காமாட்சியின் ஆசிர்வாதம் கிடைக்க கோவிலுக்கு வந்துள்ளோம். சரத்குமார் குணமாக பிரார்த்தனை செய்த அத்தனை மதங்களின் அற்புதமான ஆத்மாக்களுக்கு நன்றி. கொரோனாவில் இருந்து சரத்குமார் குணமாக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் கைகூப்பி எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.