Asianet News TamilAsianet News Tamil

நடிகை ராதிகா - சரத்குமார் மீது பண மோசடி வழக்கு! அதிரடியாக பிடி வாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்!

நடிகை ராதிகா, அவருடைய கணவர் சரத்குமார் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் இரண்டு கோடி, படம் தயாரிப்பிற்காக பெற்று, அந்த கடனை திருப்பி செலுத்தாமல் பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இவர்கள் மூவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது சைதாப்பேட்டை நீதிமன்றம்.
 
radhika and sarathkumar got arrest warrent
Author
Chennai, First Published Jun 29, 2019, 4:20 PM IST

நடிகை ராதிகா, அவருடைய கணவர் சரத்குமார் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் இரண்டு கோடி, படம் தயாரிப்பிற்காக பெற்று, அந்த கடனை திருப்பி செலுத்தாமல் பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இவர்கள் மூவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது சைதாப்பேட்டை நீதிமன்றம்.

நடிகை ராதிகா ராடன் மீடியா நிறுவனம் சார்பில் பல சீரியல்களை  தயாரித்து வருகிறார். அதே போல் சில படங்களையும் ராடன் மீடியா நிறுவனம், சார்பில் ரேடியன்ஸ் மீடியா நிறுவனத்துடன் இணைந்து படங்களையும் தயாரித்து வருகிறார். 

radhika and sarathkumar got arrest warrent

இந்நிலையில் இந்த இரண்டு நிறுவனங்களுக்கு இடையே, பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை எழுந்துள்ளது. இதனால் ரேடியன்ஸ் மீடியா நிறுவனம் ராதிகா, சரத்குமார், லிஸ்ட்டில் ஸ்டீபன் ஆகிய மூவர் மீதும் பண மோசடி வழக்கு தொடர்ந்தது. 

அதாவது, ராடன் மீடியா திரைப்படம் தயாரிப்பதற்காக ரேடியன்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் மேஜிக் ஃபிரேம்ஸ் எனும் நிறுவனத்திடம் இரண்டு  கோடி கடனாகப் பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாக சரத்குமார், ராதிகா, சரத்குமார் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் இருந்தனர். பணம் திருப்கொடுப்பதாக கூறிய நாள் தள்ளி போகியும் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாமலும், இது குறித்து கேட்ட போது உரிய பதில் கொடுக்காமல் இருந்துள்ளனர். 

radhika and sarathkumar got arrest warrent

இதனால் ரேடியன்ஸ் மீடியா சார்பில் சென்னை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இது சம்மந்தமாக நேற்று நடைபெற்ற வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ராதிகா, சரத்குமார் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் ஆஜரராகதால் ராதிகா,சரத்குமார் ஸ்டீபன் ஆகியமூவருக்கும் பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

எனவே இவர்கள் மூவரையும் கைது செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிது. இந்த  பேரும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணைஜூலை 12ம் தேதி நடைபெற உள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios