பிரபல தனியார் தொலைக்காட்சியில், கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து, அரசி, அண்ணாமலை, வாணி ராணி, சந்திர குமாரி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து, இல்லத்தரசிகளுக்கு மிகவும் நெருக்கமான நாயகியாக இருப்பவர் நடிகை ராதிகா.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு சில காரணங்களால், இவர் நடித்து வந்த சந்திரகுமாரி என்கிற, சீரியலில் இருந்து விலகுவதாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்ததோடு, தன்னுடைய கதாப்பாத்திரத்தில், இனி தன்னுடைய தோழி விஜி நடிப்பார் என கூறினார். 

இதை தொடர்ந்து 'குருதி ஆட்டம்' , சிவகார்த்திகேயனுடன் ஒரு படம், தன்னுடைய கணவருக்கு ஜோடியாகவே ஒரு படம், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். 

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில், இவரின் ஆஸ்தான சின்னத்திரை தொலைக்காட்சியிலேயே ராதிகா வரும் ஜூலை மாத இறுதியில் புதிய தொடர் ஒன்றை தயாரித்து நடிக்க திட்டமிட்டுள்ளதாகவும். அது ப்ரைம் டைமில் ஒளிபரப்பாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. அனால் இதுகுறித்த அதிகார பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

இதற்கிடையே, மற்றொரு தொலைக்காட்சியின் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ராதிகா சிறப்பித்துள்ளது இந்த வாரம் ஒலிபராக உள்ளது  குறிப்பிடத்தக்கது.