தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியான பிரபாஸின் ராதே ஷ்யாம் (Radhe Shyam) படத்தின் டிரெய்லர் யூடியூபில் புதிய சாதனை படைத்துள்ளது.

ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்தார் பிரபாஸ் (prabhas). இதையடுத்து இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவர் கைவசம் ஆதிபுருஷ், ராதே ஷ்யாம், ஸ்பிரிட், சலார் போன்ற படங்கள் உள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதில் ராதே ஷ்யாம் படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை ராதா கிருஷ்ண குமார் இயக்கி உள்ளார். இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே (Pooja hegde) நடித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இது முழுக்க முழுக்க ரொமாண்டிக் படமாக உருவாகி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் டிரெய்லர் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் ராதே ஷ்யாம் (Radhe Shyam) படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், ராதே ஷ்யாம் படத்தின் டிரெய்லர் வெளியான 24 மணிநேரத்தில் 5 மொழிகளையும் சேர்த்து 64 மில்லியன் பார்வைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் கடந்த 4 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த ‘பாகுபலி 2’ பட சாதனை, ராதே ஷ்யாம் படம் தற்போது முறியடித்து உள்ளது. இதன்மூலம் இந்தியளவில் ஒரே நாளில் அதிகம் பார்வைகளைப் பெற்ற டிரெய்லர் என்கிற சாதனையை ராதே ஷ்யாம் படத்தின் டிரெய்லர் படைத்துள்ளது.