சமீபத்தில் நயந்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'கொலையுதிர் காலம்' படத்தின்  ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி,  நடிகை நயன்தாரா பற்றியே சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதற்க்கு ஒட்டுமொத்த திரையுலகம் மட்டும் இன்றி அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் தங்களுடைய கண்டனத்தை தெரிவித்து வந்தனர். மேலும் இவரை பிரபல அரசியல் கட்சியான திமுக அடிப்படை உறுப்பினர் பட்டியலில் இருந்து தற்காலிகமாக நீக்கியது. 

இந்நிலையில் நடிகர் சங்க பொது செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் தனது சமூக வலைத்தளம் மூலம் நடிகர் ராதா ரவிக்கு எதிராக ஒரு சில கருத்துக்களை பதிவிட்டார்.

"அதாவது பெண் பெயரை தனது பெயருக்கு முன்னாள் வைத்து கொண்டு ராதாரவி பெண்களை அருவருக்கத்தக்க வகையில் பேசுவது பொருத்தமில்லாதது... எனவே அவர் தனது பெயருக்கு முன் உள்ள ராதாவை நீக்கிவிடலாம் என்று தெரிவித்திருந்தார்"

விஷாலின் இந்த கருத்துக்கு ஊடகம் ஒன்றின் பேட்டியில் பதிலளித்த ராதாரவி, 'ராதா' என்பது என்னுடைய அப்பாவின் பெயர். என்னுடைய அப்பாவின் பெயரைத்தான் நான், என் பெயருக்கு முன்னாள் வைத்துள்ளேன். விஷாலுக்க்கு அதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை. 

அவருக்கு ஆர்கே நகரில் போட்டியிடவே தெரியாதபோது இதெல்லாம் எப்படி தெரிந்திருக்கும்' என்று பதிலடி கொடுத்து விஷாலை நோஸ் கட் செய்துள்ளார்.