’பொம்பளைங்களுக்கு அசிங்கம் நடந்தா வெளிய சொல்லக்கூடாது. மூடி மறைச்சிடனும். சினிமா நடிகைகளுக்கும் சேர்த்துதான் இதைச் சொல்றேன்’ என்று மி டு’ கோஷ்டிகளுக்கு வேட்டு வைத்துப்பேசினார் நடிகர் ராதாரவி.

’பொம்பளைங்களுக்கு அசிங்கம் நடந்தா வெளிய சொல்லக்கூடாது. மூடி மறைச்சிடனும். சினிமா நடிகைகளுக்கும் சேர்த்துதான் இதைச் சொல்றேன்’ என்று மி டு’ கோஷ்டிகளுக்கு வேட்டு வைத்துப்பேசினார் நடிகர் ராதாரவி. 

தமிழ்சினிமா ‘மி டு’ விவகாரத்தில் தனது பெயரும் அரசல் புரசலாக அடிபடுவதைப் பற்றி சற்றும் அலட்டிக்கொள்ளாத ராதாரவி நேற்று பிரசாத் லேப்பில் நடந்த ’அவதார வேட்டை’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் மிக அநாகரீகமாகப் பேசினார்.

நடிகை ஸ்ரீரெட்டி குறித்து ராதாரவி அடித்த கமெண்டுகளெல்லாம் பிரசுரத்திற்கு அப்பாற்பட்டவை. அத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் ’’பாதிக்கப்பட்ட நடிகைகள் இது போன்ற விஷயங்களையெல்லாம் வெளியில் சொல்லக் கூடாது. மூடி மறைச்சிரணும். இதை வெளில சொன்னா தமிழ்ச் சினிமாவுலகத்துக்குத்தான் அவமானம்.." என்றார். 

மொத்தத்தில் உங்கள யாராவது கற்பழிச்சா வெளிய சொல்லாதீங்க’ என்பது தவிர்த்து அத்தனை எச்சரிக்கைகளையும் தெரிவித்தார். இந்த லட்சணத்துல இவரு முன்னாள் எம்.எல்.ஏ. வேற..! நாடு வெளங்கிரும்..!