இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'புதுப்பேட்டை'. இதில் நடிகர் தனுஷ், சினேகா, சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 

இந்த படத்தில் கொக்கி குமாராக, நடித்திருந்த தனுஷ் நடிப்பிற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. மேலும் தனுஷ் கேரியரில் மிக முக்கியமான படமாகவும் அமைந்தது.

எனவே தனுஷ் ரசிகர்கள் பலர், எப்போது 'புதுப்பேட்டை' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும், என இயக்குனர் செல்வராகவன், மற்றும் தனுஷிடம் கேள்வி எழுப்புவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். 

இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஒரு படவிழாவில் கலந்து கொண்ட செல்வராகவனிடம், புதுப்பேட்டை 2 படம் குறித்து ரசிகர்கள் கேட்டபோது, அவர் எந்த பதிலும் கொடுக்கவில்லை. சிறிதுநேரம் மவுனமாக நின்றுவிட்டு, ரசிகர்களைப்பார்த்து சிரித்துவிட்டு சென்றார்.

இதே கேள்வியை,  சமீபத்தில் தனுஷ் ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது கல்லூரி மாணவர்கள் எழுப்பினர். 

அப்போது தனுஷ் , 'புதுப்பேட்டை' படம் வெளியாகி 10 வருடங்களை கடந்தும் ரசிகர்களால் ரசிக்கப்படும் ஒரு படமாக இருக்கிறது. இந்த படத்திற்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. அதனால் இந்த  படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும்போது முதல்பாகத்தை விட குறைவில்லாத படமாக இருக்க வேண்டும் என்றே நினைக்கிறோம். அது தான் அந்த கொக்கிகுமார் கதாபாத்திரத்திற்கு நாம் செய்யும் நியாயமாக இருக்கும். 

இது ரொம்ப கஷ்டமான விஷயம். தற்போது, புதுப்பேட்டை 2 படத்திற்கான கதை எழுதும் பணி நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் அறிவிப்பு வரலாம் என்று தெரிவித்துள்ளார். இது தனுஷ் ரசிகர்களை மேலும் உச்சாகமடைய வைத்துள்ளது.