பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியில் பங்கேற்று, நாட்டுப்புற பாடல்களை பாடி ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர்கள், செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி தம்பதிகள்.

இந்த நிகழ்ச்சியில் வேஷ்டி சட்டை - சேலை என தோன்றிய இவர்கள், தற்போது மற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று, மாடர்ன் உடைக்கு மாறி விட்டனர். இது ஏற்கனவே ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. 

மேலும் பிரபல நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமியும் இவர்களையும், இவர்கள் பாடும் பாடலையும் சாடி பேசுவது போல், பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இதை தொடர்ந்து ஏசியாநெட் செய்தியாளர், பிரபல நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமியை தொடர்பு கொண்டு பேசினார். 

அப்போது அவரிடம் செந்தில் கணேஷ் - ராஜலக்ஷ்மி தம்பதிகள் வளர்ச்சி பிடிக்காமல் பொறாமையில் நீங்கள் பேசுவதாக வலைத்தளங்களில் கூறப்படுகிறதே அது குறித்து உங்கள் கருத்து என்ன என கேட்டார்?

இதற்கு பதில் கொடுத்த புஷ்பவனம் குப்புசாமி, "யாரையும் பார்த்து பொறாமைப்படுபவர் நான் அல்ல. தற்போதும் எனக்கும், என் பாடுக்குமான ரசிகர்கள் உள்ளனர். நான் முறையாக சங்கீதம் கற்று அதனை பாடி வருகிறேன். தற்போது இரட்டை அர்த்தம் கொண்ட பாடல்களை பாடி அந்த கலையை பலர் சீரழித்து விட்டனர். நான் செந்தில்  கணேஷ் - ராஜலட்சுமியை மட்டும் குறிவைத்து பேச வில்லை. இந்த கலை குறித்து தெரியாமல் இரட்டை அர்த்தத்தை கலந்து பாடி வரும் அனைவரையும் பார்த்து தான் கேள்வி எழுப்பினேன் என கூறினார். மேலும் அதற்கான உரிமை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதன் மூலம் செந்தில் கணேஷ் - ராஜலக்ஷ்மி வளர்ச்சி பிடிக்காமல் பொறாமையில் பேசுகிறார் என கூறி வந்த சிலருக்கு பதில் கொடுக்கும் விதமாக இவரின் பேச்சு உள்ளது.