இன்று இரவு 8 மணி முதல் புஷ்பா OTTயில் கலக்கவுள்ளது. இது குறித்து PushpaOnPrimeFromToday என்னும் ஹேஸ் டேக்கை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் (Allu Arjun) நடித்துள்ள படம் 'புஷ்பா'. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தலை மையமாக வைத்தும்... அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் வகையிலும் எடுக்கப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இப்படத்தில் அல்லு அர்ஜுன் (Allu Arjun) லாரி டிரைவராகவும், மரம் கடத்துபவராகவும் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் மிரட்டல் வில்லனாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். இதுதவிர ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், ஹரிஷ் உத்தமன், கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார். 

இந்த பாடல் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இப்படம் இரண்டு பாகங்களாக தயாராகி உள்ளது. கடந்த டிசம்பர் 17-ந் தேதி பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியானது. ரிலீசுக்கு பின் இப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும், பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பி வருகிறது. 

’புஷ்பா’ வெளியான முதல் வாரத்தில் உலகம் முழுக்க ரூ.166 கோடி ரூபாய்யும், இரண்டாவது வாரத்தில் ரூ.222 கோடி ரூபாய்யும் வசூல் செய்துள்ளது. தற்போது வரை உலகம் முழுவதிற்கும் 300 கோடி ரூபாயை கடந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான ‘புஷ்பா’ படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் கைப்பற்றியுள்ளதாகவும் ஜனவரி 7 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகவும் முன்னதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று இரவு 8 மணி முதல் புஷ்பா OTTயில் கலக்கவுள்ளது. இது குறித்து PushpaOnPrimeFromToday என்னும் ஹேஸ் டேக்கை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.