pushpa movie flop : புஷ்பா படம் தெலுங்கு மொழியை தவிர மற்ற மொழிகளில் போதுமான வரவேற்பை பெறவில்லை என கூறப்படுகிறது.

ஓமிக்ரான் தொற்றின் பரபரப்புக்கு மத்தியில் இப்படம் வெளியானாலும், வசூலில் வேற லெவலுக்கு கெத்து காட்டியுள்ளது. தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கிய இந்தப் படம் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளில் மட்டும் 40 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ திரைப்படம் அவரது முந்தைய படமான ‘ஆல வைகுந்த புரமுலு’ படத்தின் வசூலை முறியடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்க்கு முன் இவர் நடித்த இப்படம் தான் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி முதல் நாளில் 36.83 கோடி ரூபாய் வசூல் செய்து அதிக வசூல் செய்த படமாக பார்க்கப்பட்டது.

ஆனால் நேற்று வெளியான இதன் 'புஷ்பா' படம் இதனை முறியடிக்கும் அளவுக்கு அதிகமாக வசூல் செய்துள்ளதால், அல்லு அர்ஜுன் கேரியரில் இன்று வரை அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை ‘புஷ்பா’ பெற்றுள்ளது.


தெலுங்கானா மற்றும் ஆந்திர திரையரங்குகளில் 'புஷ்பா' திரைப்படம் ரூ.30 கோடி வசூலித்துள்ளது. மலையாளம், இந்தி, கன்னடம் மற்றும் தமிழ் என பல மொழிகளிலும் டப் வெளியிடப்பட்டதில் இருந்து ரூ. 5 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

மொத்தத்தில் ரூ.40 கோடி வசூலை முதல் நாளே அள்ளியுள்ளது புஷ்பா திரைப்படம். அதே போல் இப்படம் நிஜாம் பகுதியில் 11.44 கோடி ரூபாய் வசூல் செய்து மற்றொரு சாதனையை படைத்துள்ளது.

 முதல் நாளிலேயே அமோக வரவேற்பை பெற்றுள்ளதாலும் வார இறுதி நாட்களில் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பாராத வசூலை குவிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இருந்தும் புஷ்பா படத்திற்கு சில நெகடிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. தெலுங்கு படம் என்பதால் அங்கு மட்டுமே படம் ஓரளவிற்கு ஓடியுள்ளதாகவும், மற்ற மொழிகளில் போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அதோடு இரண்டாம் பகுதி போதுமான சுவாரஸ்யத்தை தரவில்லை என்றும் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.