அஜித் ஒருபோது தான் அரசியலுக்கு வர போவது மாதிரி எந்த ஒரு காரியத்தையும் செய்தது இல்லை. அதிலும் குறிப்பாக அரசியல் சம்பந்த பட்ட விஷயங்களில் இருந்து எப்போதும் விலகி தான் இருக்கிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நேற்று ஒரு சிலர் அஜித், ஜெயலலீதாவை சந்திக்கப்போகிறார் என கூறி செய்திகளை பரவ விட்டனர் , இதற்கு ஒரு முக்கிய காரணம் ஒரு மலையாள மீடியா ஒன்று எழுதிய கட்டுரை தான்.

தற்போது பஞ்சாப் மாநிலத்தின் பிரபல பத்திரிக்கை ஒன்று கோலிவுட் நடிகர் அஜித் தான் அடுத்து அரசியலுக்கு வரப்போகிறார் என கூறியுள்ளது.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

இந்த வதந்திகளுக்கு முற்று புள்ளி வைக்க அஜித் முன்வர வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.