puliMurugan Tamil released in Today

மலையாளத்தில் வெளியாகி பல சாதனைகளைப் படைத்த ‘புலி முருகன்’ இன்று தமிழில் வெளியாகிறது.

மலையாளத்தில் மோகன்லால், கமாலினி முகர்ஜி, ஜெகபதி பாபு, நமிதா உட்பட பலர் நடித்த படம் ‘புலி முருகன்’.

இந்தப் படம் திரைக்கதை ரீதியாக பல பாராட்டுக்களைப் பெற்றது. மேலும் வசூலிலும் ‘புலி முருகன்’ சாதனைப் புரிந்துள்ளது.

இந்தப் படத்தை வைஷாக் இயக்கியுள்ளார்.

படத்தை முலக்குப்பாடம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படம், மோகன்லாலின் திரைப் பயணத்தில் முக்கியமானதொரு படமாகவும் பார்க்கப்படுகிறது.

மலையாளத்தில் இதுவரை வெளிவந்த எந்தவொரு படமும் ரூ.100 கோடி வசூலைத் தொட்டதில்லை. அந்த உயரத்தை தொட்ட முதல் மலையாளப் படம் ‘புலி முருகன்’.

இந்த வசூலெல்லாம் இந்தி, தமிழ், தெலுங்குப் படங்களுக்கே உரியதாக இருந்த நிலையில் தனது 35-வது நாளில் ரூ.100 கோடியை வசூலை எட்டி சாதனை செய்தது.

மலையாளத்தில் வெற்றி பெற்ற இந்தப் படத்தை தமிழில் டப் செய்யப்பட்டு இன்று வெளியிடுகின்றனர்.

2-டி மற்றும் 3-டி என இரு வடிவங்களில் 305 திரையரங்குகளில் இந்தப் படம் தமிழகத்தில் வெளியாகிறது.