குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சிறப்பம்சமே கோமாளிகள் தான், அதன்படி இந்த சீசனில் பாலா, சிவாங்கி, சுனிதா, மூக்குத்தி முருகன், பரத், அருண், ஷக்தி, குரேஷி, மணிமேகலை ஆகியோர் உள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட அதிக பார்வையாளர்களைக் கடந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி உள்ளது. பரபரப்பான வாழ்க்கை சூழ்நிலையில் பலருக்கும் ஸ்ட்ரெஸ் பஸ்ட்டர் நிகழ்ச்சியாக உள்ளதால் இதற்கு ரசிகர் பட்டாளம் ஏராளம். இதுவரை இரண்டு சீசன் முடிந்துள்ளது. முதல் சீசனில் வனிதாவும், இரண்டாவது சீசனில் கனியும் டைட்டில் ஜெயித்தனர்.

கடந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3-வது சீசன் தொடங்கியது. இதில் போட்டியாளர்களாக மனோபாலா, அம்மு அபிராமி, ஸ்ருத்திகா, கிரேஸ் கருணாஸ், வித்யூலேகா, தர்ஷன், சந்தோஷ் பிரதாப், ரோஷினி, ராகுல் தாத்தா, ஆண்டனி தாசன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியின், சிறப்பம்சமே கோமாளிகள் தான், அதன்படி இந்த சீசனில் பாலா, சிவாங்கி, சுனிதா, மூக்குத்தி முருகன், பரத், அருண், ஷக்தி, குரேஷி, மணிமேகலை ஆகியோர் உள்ளனர். இந்நிகழ்ச்சி கடந்த 2 சீசன்களாக ஹிட் அடித்ததற்கு முக்கிய காரணம் புகழ் தான். அவருக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருவதால், அவர் இந்த சீசனில் கலந்துகொள்ள வில்லை.

இதன் விளைவாக முதல் வாரம் இந்நிகழ்ச்சியின் TRP எதிர்பார்த்தபடி இல்லையாம். பெரும்பாலான கோமாளிகள் காமெடி என்ற பெயரில் கடுப்பேற்றியதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வந்தனர். இதனால் வேறு வழியின்றி இந்த வாரம் புகழை சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சிக்கு அழைத்துள்ளனர். அவரும் இதற்கு ஒத்துக்கொண்டு ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளார். அவர் கலந்துகொண்ட புரோமோவையும் வெளியிட்டுள்ளனர். இதனால் இந்த வார எபிசோடு களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
