Asianet News TamilAsianet News Tamil

சைக்கோவுக்காக ரசிகர்களை பரவசப்படுத்தவரும் இசைஞானி!.. முதல் சிங்கிள் ட்ராக் ரிலீஸ் எப்போது தெரியுமா?


மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் 'சைக்கோ'. துப்பறிவாளன் படத்தின் ஹிட்டை தொடர்ந்து, மிஷ்கினின் அடுத்த படைப்பாக உருவாகிவரும் இந்தப் படத்தில், கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக உதயநிதி நடித்துள்ளார். 
 

psyco  song by Ilayaraja
Author
Chennai, First Published Nov 17, 2019, 12:24 AM IST

இந்த மாதிரியான நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் அவர் நடிப்பது இதுதான் முதல்முறை.'சைக்கோ' படத்தில் அதிதி ராவ் ஹைதேரி, நித்யா மேனன் என டபுள் ஹீரோயின்கள் நடித்துள்ளனர். 

இயக்குநர் ராம், முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.  அங்குலிமாலா பற்றிய புகழ்பெற்ற புத்தமத கதையை தழுவி 'சைக்கோ' படம் உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்திற்கு 'இசைஞானி' இளையராஜா இசையமைத்துள்ளார்.

ஏற்கெனவே இந்தப் படத்தி்ன் மிரட்டலான டீசர் வெளியாகி, ரசிகர்களை மிரளச் செய்தது. இதனைத் தொடர்ந்து, 'சைக்கோ' படக்குழுவிடமிருந்து மற்றொரு சர்ப்ரைசான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சைக்கோவுக்காக இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கும் 'உன்ன நினச்சு' பாடல் முதல் சிங்கிள் ட்ராக்காக வரும் நவம்பர் 18ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

psyco  song by Ilayaraja
முதல்முறையாக இளையராஜா - மிஷ்கின் - உதயநிதி கூட்டணி அமைத்திருக்கும் படம் என்பதால், 'சைக்கோ' படத்தின் இ்சை மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. அதனை பூர்த்தி செய்யும் விதமாக, படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் 'சைக்கோ' படம் வரும் டிசம்பர் 27-ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios