இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம், 'சைக்கோ'. இந்த படத்தின் படப்பிடிப்பு  பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், இந்த படத்தின் போஸ்ட் புரோடக்ஷான்  பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

'சைக்கோ' திரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில், கதாநாயகிகளாகா நடிகை அதிதி ராவ் மற்றும், நித்திய மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் ராம், ஷாஜி சென், ஆடுகளம் நரேன், மற்றும் சிங்கம் புலி உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.

தற்போது இந்த படத்தில் இடம்பெற்றுள்ள, உன்ன நெனச்சி நெனச்சி... உருகிப்போன மெழுக என்கிற லிரிகள் பாடல் வெளியாகியுள்ளது. அதிதி ராவிற்காக உதயநிதி பாடுவது போல் இந்த பாடல் அமைந்துள்ளது.

இளையாராஜா இசையில், கபிலன் வரிகளில், சித் ஸ்ரீராம் பாடியுள்ள   இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

தற்போது வெளியான லிரிகள் பாடம் இதோ...