தயாரிப்பாளர் சங்க பூட்டை உடைப்பதற்கு போலீஸார் அனுமதி மறுத்ததால் சுமார் அரைமணி நேரத்துக்க்கும் மேலாக கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால். நேற்று எதிர் கோஷ்டியினர் போட்ட பூட்டை உடைத்து இன்று பதினோரு மணிக்கு உள்ளே செல்லவிருப்பதாக விஷால் அறிவித்திருந்தார். 

ஆனால் எதிர்கோஷ்டியினர் சற்றுமுன்னர் முதல்வர் எடப்பாடியை தலைமைச் செயலகத்தில் வைத்து சந்தித்து கோரிக்கை வைத்த நிலையில் போலீஸார் விஷால் கோஷ்டிகளை பூட்டை உடைக்க அனுமதிக்கவில்லை. இந்நிலையில் போலீஸாருடன் கடுமையான விவாதத்தில் ஈடுபட்ட விஷால்,’ தயாரிப்பாளர் சங்கத்தில் மெம்பராகவோ யாரோ சிலர் போட்ட பூட்டைத் திறக்க அனுமதிக்காதது அநியாயம். 

அதற்குப்போய் நீங்கள் காவல் காக்கலாமா? நாளை எங்கள் சங்க உறுப்பினர்களின் 7 படங்கள் ரிலீஸாக உள்ள நிலையில் எங்களை உள்ளே அனுமதிக்காவிட்டால் பல கோடிகள் நஷ்டம் ஏற்படும் என்று கழுத்து நரம்புகள் புடைக்க வாதிட்டார். ஆனால் 11.30 வரை போலீஸார் விஷாலை அனுமதிக்கவில்லை. மீறித் திறந்தால் விஷால் உட்பட அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீஸார் எச்சரித்தனர்.