producers council election

சென்னையில் இன்று நடைபெற்ற திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தேர்தலில் விஷால் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.. தலைவர், துணைத்தலைவர் , செயலாளர், பொருளார் உட்பட 27 பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலுக்கு எப்போதும் இல்லாத அளவிற்கு விஷால் அணி, தாணு அணி, எஸ்.ஏ சந்திரசேகரன் அணி உள்ளிட்ட 3 அணிகள் போட்டியிட்டன.விஷால், கேயார் மற்றும் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் போட்டியிட்டனர். காலை8 மணிமுதல் ஓட்டுபதிவு தொடங்கி, மாலை 4 வரை ஒட்டுப்பதிவு நடைபெற்றது.

ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஷ்வரன் இந்த தேர்தலை நடத்துவதற்கான தேர்தல் அதிகாரியாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தார்.

ஒட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவில் விஷால் 476 கேயார் 224 ராதாகிருஷ்ணன் 333 ஒட்டுக்கள் பெற்றுள்ளனர். விஷால் 143 ஒட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது