producer varunmaniyam murder attack

நடிகை திரிஷா முன்னணி நடிகையாக இருக்கும் போதே தயாரிப்பாளரும், தொழிலதிபருமான வருண் மணியனை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்தார். இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது.

இந்நிலையில் திடீர் என இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தனர்.

தற்போது வருண் மணியத்திற்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் முடிவடைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், திடீரென அவரது அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள், லிப்டுக்குள் வைத்து அவரை குத்தி கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர்.

மேலும் கொலை செய்ய முயற்சி செய்தவர்களை அலுவலகத்தில் வேலை செய்த இருவர் மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். வருண்மணியன் பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.