producer sunandha pass away

தமிழில் ஜீன்ஸ், மின்னலே, தாம்தூம் ஆகிய படங்களுக்கு இணை தயாரிப்பாளராக இருந்த சுனந்தா முரளி மனோகர் மும்பையில் காலமானார். இவருக்கு வயது 60.

அண்மைக்காலமாக உடல் நலம் குன்றி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி காலமானார். இவர் பிரபல கன்னட தயாரிப்பாளர் ஆர்.என். மந்த்ராவின் மகள். மேலும் இவர் பாலிவுட்டில் மாதவன் நடித்த ராம்ஜி லண்டன் வாலே மற்றும் இண்டியன் சம்மர், ப்ளட் ஸ்டோன், இன்பர்னோ, ஜிங்கிள் பாய், பிரவோக்டு போன்ற பிரமாண்ட ஹாலிவுட் படங்களையும் தயாரித்துள்ளார்.

இவரது மரணம் குறித்து அறிந்த பாலிவுட் பிரபலங்கள் பலர் இவருடைய உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.