producer sucide
மராத்தியில் 'டோல் தசா' என்ற படத்தை தயாரித்தவர் அதுல் தப்கிர். இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி படு தோல்வி அடைந்தது.
இதனால் விரத்தியாக காணப்பட்ட, தயாரிப்பாளர் பிரபல ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியிருக்கிறார். இரண்டு நாட்களாக அவர் அறையில் இருந்து வெளியே வராததால் ஓட்டல் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் ஓட்டல் அறையை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது அறைக்குள் அதுல் தப்கிர் இறந்து கிடந்திருக்கிறார்.
உடனே போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
அதுல் தப்கிர் தற்கொலை குறித்து தன்னுடைய பேஸ்புக் பக்கத்திலும் பதிவு செய்துள்ளார். அதில் தான் தயாரித்த படம் ஓடவில்லை என்பதால் பல சோதனைகளை சந்தித்ததாகவும் அதனாலேயே தற்கொலை செய்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
