தனது உடல் எடையைக் குறைப்பதற்காக லண்டன் சென்றுள்ள நடிகர் சிம்பு எப்போது திரும்பி வருவார் என்பது தெரியாததால் அவர் அடுத்து நடிக்கவிருக்கும் ‘மாநாடு’ படம் டிராப் ஆகிவிட்டதாக பரபரப்பான செய்திகள் பரப்பப்பட்ட நிலையில், அவற்றைக் கடும் கோபத்துடம் மறுக்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நடிகர் சிம்பு தனது உடல் எடையைக் குறைப்பதற்காக தற்போது லண்டனில் உள்ளார். வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்துக்காக உடல்ரீதியாக சிம்பு தயாராகி வருகிறார். மாநாடு படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இந்த நிலையில், மாநாடு படம் கைவிடப்பட்டுவிட்டதாக நேற்று காலையில் சில செய்திகள் வெளியாகின. 

அச்செய்திகளை கடுமையாக மறுக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி,’’ ஒரு படம் துவங்குவதில் உள்ள பிரச்சினைகள் எதையும் புரிந்துகொள்ளாமல் சர்வசாதாரணமாக படம் டிராப் என்று போட்டுவிடுகிறார்கள். நாங்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி மே மாதம் படப்பிடிப்பு உறுதியாகத் துவங்கும்.

சில படங்களில் நடிப்பதற்கு வெங்கட் பிரபு ஒப்பந்தமாகியுள்ளார். அந்தப் படங்களில் அவர் கவனம் செலுத்தி வருகிறார். இருவரும் திரும்பிய பிறகு மாநாடு படத்தைத் தொடங்குவோம். நல்ல பொழுதுபோக்கு படமாக மாநாடு இருக்கும். ரசிகர்களுக்கு நிச்சயமாகப் பிடிக்கும்” என்று தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் ராஷி கண்ணா, ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இது வெங்கட் பிரபுவின் ஒன்பதாவது படமாகும். கடந்த ஆண்டு ஜூலை 10ஆம் தேதியன்று படத்தின் தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.