நடிகர் விஷால் தலைமையிலான நிர்வாகத்தை கண்டித்து, தி.நகரில் அமைத்துள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் முன்பு, தயாரிப்பாளர்கள் அன்பழன், எஸ்.வி.சேகர், உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

விஷால் பொதுக்குழுவை கூட்டி ஆலோசிக்காமல் தனிச்சையாக அனைத்து முடிவுகளையும் எடுத்துவருவதாகவும்,  விஷால் மீது குற்றம்சாட்டியுள்ளனர்.  அதே போல்  நடிகர் சங்கத்தில் செயலாளராக இருக்கும் போது விஷால் தயாரிப்பாளர் சங்க பொறுப்பை ஏற்றது தவறு என்றும் கூறி தயாரிப்பாளர் சங்கத்தின் முன்பு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். 

மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர் சங்க அறைக்கு பூட்டு போட்டனர்.