பிரபல தயாரிப்பாளர் ஒருவர், தன்னுடைய படத்தில் நடித்த இளம் நடிகை ஒருவரின் ஆபாச வீடியோவை வெளியிட்டுள்ளது போஜ்புரி திரைப்பட உலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உபேந்திரவர்மா என்கிற போஜ்புரி தயாரிப்பாளர் இளம் நடிகை ஒருவரை வைத்து குறும்படம் எடுத்துள்ளார். அந்த குறும்படத்தில் வரும் காட்சி ஒன்றில் நடிகை துண்டு மட்டும் அணிந்து வரும் காட்சி படமாக்கப்பட்டது. இந்த காட்சி படமாக்கிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக துண்டு நழுவி கீழே விழுந்தது. 

ஆனால் அந்த காட்சியும் கேமராவில் பதிவானது. உடனடியாக அந்த நடிகை தயாரிப்பாளர் மட்டும் இயக்குனரிடம் அந்த காட்சியை படத்தில் இருந்து நீக்கும் படி கூறியுள்ளார். அதற்கு இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர். 

இந்த நிலையில் தயாரிப்பாளர் உபேந்திரவர்மா தனது குறும்படத்தில் அந்த காட்சியை நீக்கிவிட்டாலும் தனியாக அந்த காட்சியை யூடியூபில் பதிவு செய்துள்ளார். இந்த காட்சியை ஏராளமானோர் பார்த்தது மட்டும் இன்றி ஆபாச இணையதளங்களிலும் இதனை அப்லோடு செய்துள்ளனர். 

இந்த தகவலை தன்னுடைய நண்பர்கள் மூலம் கேள்விப்பட்ட அந்த நடிகை தயாரிப்பாளர் உபேந்திரவர்மா மீது போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் தேடுவதை அறிந்து கடந்த இரண்டு மாதமாக தலைமறைவாக இருந்த தயாரிப்பளர் உபேந்திரவர்மாவை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.