- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கார்த்திக்கை துரத்தியடித்த சாமுண்டீஸ்வரி ஏன் ரேவதியை வீட்டை விட்டு அனுப்பவில்லை: கொந்தளிக்கும் ரசிகர்கள்!
கார்த்திக்கை துரத்தியடித்த சாமுண்டீஸ்வரி ஏன் ரேவதியை வீட்டை விட்டு அனுப்பவில்லை: கொந்தளிக்கும் ரசிகர்கள்!
Karthik sent away from home : கார்த்திகை தீபம் 2 சீரியலில் கார்த்திக்கை வீட்டிலிருந்து வெளியில் அனுப்பும் சாமுண்டீஸ்வரி ஏன், தனது மகள் ரேவதியை மட்டும் வெளியில் அனுப்பவில்லை என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கார்த்திகை தீபம் 2 சீரியல்
கார்த்திகை தீபம் 2 சீரியலில் சாமுண்டீஸ்வரிக்கு எதிராக ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். அது ஏன் என்று இந்த தொகுப்பில் முழுவதுமாக பார்க்கலாம். கார்த்திகை தீபம் 2 சீரியலில் தனது அத்தை மற்றும் தாத்தாவின் குடும்பத்தை ஒன்று சேர்த்து வைக்க கிராமத்திற்கு வந்தவர் தான் கார்த்திக். வந்த இடத்தில் கோயிலை திறந்து மாமாவின் கையால் கோயில் கும்பாபிஷேகத்தை நடத்துவேன் என்று ஊரார் முன்னிலையில் வாக்கு கொடுத்தார். அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டார். ஆனால், முதல் முயற்சியின் போது அம்மாவை இழந்தார். கோயில் கும்பாபிஷேகம் நடந்து கொண்டிருக்கும் போது சாலை விபத்தில் கார்த்திக்கின் அம்மா உயிரிழந்தார்.
2ஆவது முயற்சியில் தான் பூகம்பம் வெடித்தது
2ஆவது முயற்சியில் தான் பூகம்பம் வெடித்தது. ஏனென்றால், ராஜா சேதுபதியின் உண்மையான பேரன் என்பதை மறைத்து கார்த்திக் தனது அத்தை சாமுண்டீஸ்வரி வீட்டில் டிரைவராக வேலைக்கு சேர்ந்தார். கொஞ்சம் கொஞ்சமாக அவரது மனதில் இடம் பிடித்து நம்பிக்கையானவர் என்று பெயர் பெற்றார். மேலும், அவரை அவரது குடும்பத்தையும் ஆபத்திலிருந்து காப்பாற்றினார். ஒரு கட்டத்தில் தனது அத்தையின் விருப்பத்திற்காக ரேவதிக்கு விருப்பமே இல்லாமல் அவரை திருமணம் செய்யும் சூழல் ஏற்பட்டது.
கார்த்திக் யார்
நாளடைவில் ரேவதிக்கு கார்த்திக் யார் என்ற உண்மை தெரிய வர ஆரம்பித்தது. பின்னர் கார்த்திக்கை காதலிக்க ஆரம்பித்தார். ஆனால், கார்த்திக்கிற்கு ஏற்கனவே திருமணமானது தெரிந்து ஆதங்கப்பட்டார். பின்னர் அவரைப் போன்று தானும் கார்த்திக்கை காதலிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அவரை காதலித்தார். தனது காதலை கார்த்திக்கிடமும் சொல்லிவிட்டார். இருவரும் ஒருவருக்கொருவர் காதலிக்க ஆரம்பித்தனர்.
ம்பாபிஷேகத்தை நடத்த கார்த்திக் முயற்சி
இந்த நிலையில் தான் கோயில் கும்பாபிஷேகத்தை நடத்த கார்த்திக் 2ஆவது முறையாக முயற்சிகள் எடுத்தார். ஆனால், அதை தடுக்க சிவனாண்டி, காளியம்மாள், முத்துவேல் மற்றும் சந்திரகலா ஆகியோர் திட்டமிட்டனர். இதற்காக வெடிகுண்டு ஏற்பாடு செய்து கோயிலில் 2 இடங்களில் வைத்தனர். ஒரு இடத்தில் வைத்தது பற்றி அவரே சொல்லிவிட்டார். மற்றொரு இடத்தில் வைத்தது பற்றி சொல்ல வேண்டுமானால், நீ யார் என்ற உண்மையை கும்பாபிஷேகம் நடப்பதற்குள் சொல்ல வேண்டும் என்று கண்டிஷன் போட்டார்.
யார் என்ற உண்மையை சொல்லிவிட்டார்
கார்த்திக்கும் வேறு வழியில்லாமல் தான் யார் என்ற உண்மையை சொல்லிவிட்டார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சாமுண்டீஸ்வரி ஆத்திரத்தில் தலையில் தண்ணீரை ஊற்றி இனிமேல் இந்த ஊருக்கும், இந்த குடும்பத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினார். மேலும், தாலியை வைத்து பிளாக்மெயில் செய்து கணவரையும், மகள்களையும் அங்கிருந்து கூட்டிக் கொண்டு சென்றார். ரேவதி வர முடியாது என்று சொல்லியும் அவரை கட்டாயப்படுத்தி கூட்டிச் சென்றார்.
இன்றைய 1053ஆவது எபிசோடில் என்ன நடக்கிறது
இந்த நிலையில் தான் இன்றைய 1053ஆவது எபிசோடில் என்ன நடக்கிறது என்பது தொடர்பான புரோமோ வீடியோவை ஜீ தமிழ் வெளியிட்டது. இதில், ரேவதியை பார்க்க வந்த கார்த்திக்கை சாமுண்டீஸ்வரி கண்டமேனிக்கு திட்டி தீர்த்து வீட்டை விட்டு வெளியில் அனுப்பினார். மேலும், வீட்டிலிருந்த அவரது உடைகளையும் நெருப்பில் தீயிட்டார். இதையெல்லாம் பார்த்து சந்திரகலா ரசித்தார். ஆனால், ரேவதி மன வேதனை அடைந்தார்.
கார்த்திக்கையை வீட்டை விட்டு வெளியில் அனுப்பிய சாமுண்டீஸ்வரி
இந்த நிலையில் தான் தன்னை ஏமாற்றிய கார்த்திக்கையை வீட்டை விட்டு வெளியில் அனுப்பிய சாமுண்டீஸ்வரி ஏன் அவரது மனைவி ரேவதியை மட்டும் வீட்டை விட்டு வெளியில் அனுப்பவில்லை. அவரும் கார்த்திக்குடன் சேர்ந்து உண்மையை மறைக்கத்தான் செய்தார். அப்படியிருக்கும் போது அவரை மட்டும் ஏன் வீட்டில் தங்க வைக்க வேண்டும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும், இனிமேல் சாமுண்டீஸ்வரி மற்றும் கார்த்திக் தொடர்பான காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டனர். எப்படியோ சந்திரகலா நினைத்தது நடந்துவிட்டது. யானைக்கும் அடி சறுக்கும் என்பது இப்போது கார்த்திக் விஷயத்தில் நடந்துவிட்டது. இனி வரும் காலங்களில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.