பி.வாசு இயக்கத்தில் குஷ்பு, பிரபு நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான திரைப்படம் சின்னத்தம்பி. இந்த படத்தை கே.பி.பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கே.பி.பாலு தயாரித்திருந்தார். அத்தோடு மட்டுமின்றி சரத்குமாரின் ஜானகிராமன், பாண்டித்துரை உட்பட சுமார் 15-க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார். கே.பி.பாலு கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். 

இதையடுத்து அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு உடல் நிலை மேலும் மோசமானதை அடுத்து தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். 

சமீபத்தில் நடந்த திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் செயற்குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட இவர், அதில் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கே.பி.பாலுவின் மறைவிற்கு ராதிகா, சரத்குமார் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.