பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ரா ஒன், சென்னை எக்ஸ்பிரஸ் , ஹாப்பி நியூ இயர் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் கரீம் மோரானி. ஏப்ரல் 6ம் தேதி இலங்கையில் இருந்து திரும்பிய கரீம் மோரானியின் இளைய மகள் ஷாஸாவுக்கும், ராஜஸ்தானில் இருந்து வந்த அவரது மூத்த மகள் சோவா மோரானிக்கும் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இருவரில் சோவாவுக்கு மூச்சு திணறல், காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்தன. 

இதையடுத்து இருவரும் வேறு, வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து ஏப்ரல் 8ம் தேதி கரீம் மோரானிக்கு நடந்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கரீம் மோரானி, மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார். பிரபல தயாரிப்பாளரான கரீம் மோரானியின் குடும்பம் கொரோனாவின் பிடியில் சிக்கித் தவிப்பது பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதையும் படிங்க: “என் புருசனை திருடிய நயன்தாராவை எங்கு பார்த்தாலும் உதைப்பேன்”... பிரபுதேவா மனைவி ஆவேசம்...!

இந்நிலையில் கரீம் மோரானியின் இரண்டு மகள்களுக்கும் கடந்த 13ம் தேதி நடந்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட இருவரும் 14 நாட்கள் தனிமனித விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.  

இதையும் படிங்க: ஆடையில்லாமல் தலையணையை மட்டும் கட்டிக்கொண்டு ஹாட் போஸ்... வைரலாகும் இளம் நடிகையின் சேலஞ்ச்...!

கரீம் மோரானிக்கு மட்டும் தொடர்ந்து கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு கடந்த 2 முறையும் நடத்தப்பட்ட பரிசோதனைகள் மூலம் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து கொரோனா தொற்றிலிருந்து மீண்ட தயாரிப்பாளர் கரீம் மோரானி வீடு திரும்பியுள்ளார். இருப்பினும் அடுத்த 14 நாட்களுக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக தனிமையில் இருக்கும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.