producer election updated news

இன்று சென்னையின் ஹாட் செய்தி என்றால் தயாரிப்பாளர் சங்க தேர்தல் தான். எப்படியும் வெற்றி பெற்று தீர வேண்டும் என ஒவ்வொரு அணியினரும் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றனர்.

இன்று காலை 8 மணிக்கு துவங்கிய வாக்கெடுப்புகள் மாலை 4.15 மணியுடன் முடிவடைந்தது.

இதில் ரஜினி, கமல், இயக்குனர் மிஷ்கின், முருக தாஸ், பாண்டி ராஜ், மோகன் ராஜன், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் பங்கேற்று வாக்களித்தனர்.

தற்போத நிலவரப்படி 1059 வாக்குகள் பதிவாகியுள்ளது. தற்போது தேர்தல் அதிகாரிகள் யாருக்கு எத்தனை வாக்குகள் விழுந்துள்ளது என எண்ணிக்கை எடுக்க தொடங்கியுள்ளனர்.