Vijay 66 story :  சமீபத்தில் பேட்டியளித்துள்ள தயாரிப்பாளர் DilRaju விஜய் 66 படம் குடும்ப கதியாக இருக்கும் என்றும்.. விஜயின் வெற்றி படங்களான துள்ளத மனமும் துள்ளும், பூவே உனக்காக போன்ற படங்களின் வரிசையில் விஜய் 66 இடம்பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.. 

தளபதி பட அப்டேட் என்றாலே ரசிகர்களுக்கு தனி கொண்டாட்டம் தான். அடுத்தடுத்து அதிரடி படங்களை கொடுத்து ரசிகர்களை குஷி படுத்தி வரும் விஜய் 'மாஸ்டர்' படத்தில் வாத்தியாராக தோன்றி மாஸ் காட்டி இருந்தார். கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படம் நல்ல வெற்றியை பெற்று கொடுத்தது. இதை தொடர்ந்து கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்துள்ள நெல்சன் மண்டேலா இயக்கத்தில் 'பீஸ்ட்' படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், மூன்று வில்லன்களில் ஒருவராக செல்வராகவனும் இவர்களுடன் யோகி பாபு உள்ளிட்டோரும் இணைந்து நடித்து வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தை சன்பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. நெல்சனின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிரூத் 'பீஸ்ட்' படத்திற்கும் இசையமைக்கிறார். ஜார்ஜியா, சென்னை, டெல்லியென பிரமாண்ட செட்களுடன் உருவாகி வரும் இந்த படம் வரும் ஏப்ரலில் திரைக்கான உள்ளது.

இதற்கிடையே விஜய் தனது 66 வது படத்திற்காக தெலுங்கு இயக்குனர் மற்றும் தெலுங்கு தயாரிப்பாளருடன் கைகோர்த்துள்ளார். இந்த புதிய படத்தை இயக்கவுள்ள வம்சி பைடிபல்லி தமிழுக்கு புதிய இயக்குனர் இல்லை. இவர் ஏற்கனவே கடந்த 2016-ம் ஆண்டு நாகார்சூனா, கார்த்திக் நடிப்பில் வெளியான தோழா படத்தை இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஹிட் அடித்த இந்த படம் முழுக்க முழுக்க எமோஷன் கலந்த கமர்ஷியல் படமாகவே இருந்தது. அதோடு வம்சி இயக்கத்தில் வெளியாகியா பிருந்தாவனம், மகரிஷி உள்ளிட்ட படங்கள் எமோஷன் சார்ந்த கதைக்களத்தையே கொண்டிருந்தன. அதன்படி விஜயின் 66 திரைப்படமும் கமர்ஷியல் படமாக இருக்க கூடும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. 

விஜய் 66 குறித்து சமீபத்தில் பேட்டியளித்த தயாரிப்பாளர் DilRaju விஜய் 66 படம் குடும்ப கதியாக இருக்கும் என்றும்.. விஜயின் வெற்றி படங்களான துள்ளதமானமும் துள்ளும், பூவே உனக்காக போன்ற படங்களின் வரிசையில் விஜய் 66 இடம்பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.. அதோடு இந்தாண்டு மார்ச் துவக்கத்தில் விஜய் 66 சூட்டிங் தொடங்க வாய்பிருப்பதாகவும் தயாரிப்பாளர் கூறியுள்ளார்..